'மழையில் நனைகிறேன்' விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படம் : இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக் : இயக்குனராக மேஜர் சுந்தர்ராஜன் | பிளாஷ்பேக்: இந்தியாவின் முதல் அந்தாலஜி படம் | நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை நாடாள வைத்த “நாடோடி மன்னன்” உருவான பின்னணி | டெல்னா டேவிஸ் கியூட் கிளிக்ஸ் | காதலியை கரம்பிடித்த குரு | புற்றுநோய் பாதிப்பு : பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் மரணம் | 'வொர்க் பிரம் ஹோம்' - விஜய்யைக் கிண்டலடிக்கும் மீம்ஸ்கள் | 'புஷ்பா 2' - 3டி ரிலீஸ் தள்ளி வைப்பு ? |
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களது நாடித்துடிப்பை, ரசனையை நன்கு அறிந்தவரான மக்கள் திலகம் எம் ஜி ஆர், தனது படங்களின் பெயர்கள், தனது கதாபாத்திரம், படத்தின் பாடல்கள், வசனம் என அனைத்திலும் கவனம் செலுத்தி, எளியோர் கொண்டாடி மகிழ்ந்த ஏழைப் பங்காளனாய் இறுதி வரை வெள்ளித்திரையில் வலம் வந்து, வெற்றி நாயகனாக வாழ்ந்து காட்டியவர் மக்கள் திலகம் எம் ஜி ஆர். அவரைப் போற்றிப் புனைந்த பாடல்கள் ஏராளம் இருந்தாலும், குண்டடிப்பட்டு குணமாகி மறுபிறவி கண்ட மக்கள் திலகத்தை வாழ்த்திப் பாடுவதுபோல் அமைந்திருந்த “நினைத்தேன் வந்தாய் நூறு வயது” என்ற இந்தப் பாடலுக்கென ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்தப் பாடல் உருவான பின்னணியைத்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம்.
சத்யா மூவீஸ் தயாரிப்பில் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த “காவல்காரன்” திரைப்படம் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், திடீரென எம் ஜி ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்பட்டிருந்தார். ஆறேழு மாத சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பிய பின், அவர் கலந்து கொண்ட முதல் படப்பிடிப்பே “காவல்காரன்” படத்தினுடையதுதான். அன்று படமாக்கப்பட இருந்த பாடல் காட்சிதான் “நினைத்தேன் வந்தாய் நூறு வயது” என்ற காவியப் பாடல்.
எம் ஜி ஆர் அன்று படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழையும்போதே ஒரு புதுமை செய்ய விரும்பியிருந்தனர் படக்குழுவினர். எம் ஜி ஆர் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து, காரில் இருந்து இறங்கியதும் இந்தப் பாடலை ஒலிபரப்ப முடிவு செய்திருந்தனர். அவர்கள் நினைத்தவாறே எம் ஜி ஆர் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து, காரில் இருந்து இறங்கியதும் அந்தப் பகுதி முழுவதும் கேட்கும்படி “நினைத்தேன் வந்தாய் நூறு வயது” என்று பாடல் ஒலிபரப்பாக, காரிலிருந்து இறங்கி படப்பிடிப்புத் தளத்தில் கால் வைத்த எம் ஜி ஆர், இந்தப் பாடலைக் கேட்டவுடன் நெகிழ்ந்து போனார்.
அவர் மறுபிறவி எடுத்து மீண்டும் நடிக்க வந்திருந்ததால், எம் ஜி ஆரைப் பார்க்க பிரபல வி ஐ பிக்கள், ரசிகர்கள் என பெரும் கூட்டமே படப்பிடிப்புத் தளத்தில் கூடியிருந்தனர். அன்றைய தினம் அந்தப் பாடல் காட்சியில் நடிக்க உடனே தயாராகியும்விட்டார் எம் ஜி ஆர். டேக்கின்போது மிக அற்புதமான நடன அசைவுகளை தந்திருப்பார் எம் ஜி ஆர். அவர் பிரமாதமாக நடனமாடியதைக் கண்ட பார்வையாளர்கள் தரப்பில் இருந்து வந்த கரவொலியும் அவரை மிகவும் உற்சாகப்படுத்த, அனைவருக்கும் இருகரம் கூப்பி வணங்கி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டு பின் அங்கிருந்து விடைபெற்றார் எம் ஜி ஆர்.